Sri Lanka Government Web Portalසිංහල අකුරු මුහුණත බාගත කිරීමதமிலெழுத்தைப் பெறவூம்

සිංහල (Sinhala)தமிழ் (Tamil)English

Homeவரிகளும் கட்டணங்களும்

வரிகளும் கட்டணங்களும்

முத்திரைத் தீர்வை

dutiesவரைவிலக்கணம்

  • 1990 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மத்திய மாகாண நிதி வரைவுச் சட்டத்தின் 37 ஆவது பிரிவின் கீழ் முத்திரைத் தீர்வைகள் அறவிடப்படுகின்றன.

அது இவ்வாறு அறவிடப்படுகின்றது

  • மத்திய மாகாணத்துக்குள் அமைந்தள்ள அசையாச் சொத்துக்களின் கைமாற்றம் தொடர்பான ஒவ்வொரு செயற்பாட்டின் மீதும்
  • இலங்கையின் மத்திய மாகாணத்தில் சட்டபூர்வமாக நிறுவப்பட்டுள்ள எந்தவொரு நீதிமன்றத்திலும் சமர்ப்பிப்பதற்காக கோவைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு ஆவணத்தின் மீதும்

செல்லுபடிக் காலம்

  • 1991 ஆம் ஆண்டு சனவரி 01 ஆம் திகதி முதல்

முத்திரைத் தீர்வைக் கட்டணங்கள்

01.

எந்தவொரு ஆதனத்தினதும் கைமாற்றம் - இணை உரித்தாளர்களிடையே அல்லாத*

அ. சமமான பெறுமதியாயின்

அவ்வாறான சொத்துக்களைக் கைமாற்றம் செய்யும் போது அதன் சந்தைப் பெறுமதியின் மீது அறவிடப்படும் அதே தீர்வையை அறவிடுதல்

 

ஆ. சமனற்ற பெறுமதியாயின்

அவ்வாறான சொத்துக்களைக் கைமாற்றம் செய்யும் போது அதன் அதிகூடிய பெறுமதியின் மீது கணிக்கப்பட்ட சந்தைப் பெறுமதியின்படி அதே தீர்வையை அறவிடுதல்

 

எந்தவொரு ஆதனத்தினதும் கைமாற்றம் - இணை உரித்தாளர்களிடையே*

அ. சமமான பெறுமதியாயின்

 

10.00

 

ஆ. சமனற்ற பெறுமதியாயின்

ஒரு சொத்தின் கைமாற்றத்தின் போது செலுத்தப்பட வேண்டிய அதே அளவுத் தீர்வை கைமாற்றம் செய்யப்படும் சொத்தின் சந்தைப் பெறுமதியின் வித்தியாசமாக அது அமையும்.

02.
 

அசையாச் சொத்துக்களின் நன்கொடை*

 

அ. பெறுமதி ரூ. 50,000 அல்லது அதிலும் குறைவானவை

ஒவ்வொரு 100 ரூபாவுக்கும் அல்லது அதன் பகுதிக்கும்

3.00

 
 

ஆ. பெறுமதி ரூ. 50,000 ஐத் தாண்டியவை
 

முதல் 50.000 ரூபாவின் மீது

 1,500.00

மீதியின் ஒவ்வொரு 100 ரூபாவுக்கும்

2.00

 03.
 

Selling, immovable property*

 

அ. பெறுமதி ரூ. 100,000 அல்லது அதிலும் குறைவானவை

ஒவ்வொரு 100 ரூபாவுக்கும் அல்லது அதன் பகுதிக்கும்

 3.00

 
 

ஆ. பெறுமதி ரூ. 100,000 ஐத் தாண்டியவை
 

முதல் 100,000 ரூபாவின் மீது

 3000.00

மீதியின் ஒவ்வொரு 100 ரூபாவுக்கும்

 4.00

04.

முன்வைக்கப்படும் அல்லது கோவைப்படுத்தப்படும் ஒவ்வொரு ஆவணத்தின் மீதும்*

அ. உயர் நீதிமன்றம்

ஒவ்வொரு 1000 ரூபாவுக்கும் அல்லது அதன் பகுதிக்கும் (உச்ச தொகை ரூ. 2,000)

2.00

 05.

ஆ. மாவட்ட நீதிமன்றம்

ஒவ்வொரு 1000 ரூபாவுக்கும் அல்லது அதன் பகுதிக்கும் (உச்ச தொகை ரூ. 1,000)

1.00

வர்த்தமானி

* வர்த்தமானி அறிவித்தல் -642/18, 1990.12.28


முத்திரைத் தீர்வைக்கான மதிப்பீடு (அசையாச் சொத்துக்கள்)

*. எந்தவொரு ஆதனத்தின் மீதும் (நன்கொடையாக வழங்கப்பட்ட அசையாச் சொத்துக்கள் தவிர்ந்த) ஏனைய எந்தவொரு சொத்தும் எந்தவொரு திகதியிலும் என்பது, மதிப்பீட்டாளரின் கருத்துப்படி குறித்த திகதியில் திறந்த சந்தையில் வாங்கப்பட்ட விலையாகும்.;

*. நன்கொடையாக வழங்கப்பட்ட எந்தவொரு அசையாச் சொத்தும்,அசையாச் சொத்தாக 1977 மார்ச்சு மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் கொடையாளியால் வழங்கப்பட்டதெனின், அது - 

  1. பகிரங்கச் சந்தையில் 1977 மார்ச்சு மாதம் 31 ஆம் திகதியில் விற்கப்பட்டு மதிப்பீட்டாளரது கருத்தின்படி அது வாங்கப்படும் விலையுடன் குறித்த ஆதனத்தை அபிவிருத்தி செய்யவும், திருத்தியமைக்கவும், மேலதிகமாகச் சேர்க்கவும் செய்யப்பட்டிருப்பின் அத்தொகை 1977 மார்ச்சு மாதம் 31 ஆம் திகதியின் பின்னர் நன்கொடை வழங்கப்படும். ஆதனத்துடன் சேர்க்கப்பட்டதாகும்.
  2. மதிப்பீட்டாளரின் கருத்தின்படி குறித்த ஆதனம் பகிரங்கச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வாங்கப்படுமெனின்,குறித்த தொகை நன்கொடை வழங்கப்பட்ட திகதியில் அதற்கான விலையாகும்.;

எந்த விலை குறைவாக உள்ளதோ

*. நன்கொடையாக வழங்கப்பட்ட ஏதேனுமொரு அசையாத சொத்து, அது அசையாச் சொத்தாக 1977 மார்ச் மாதம் 31 ஆம் திகதியின் பின்னர் கொடையாளியார் ஏற்கப்பட்டதென்றால், அது - 

  1. பகிரங்கச் சந்தையில் 1977 மார்ச்சு மாதம் 31 ஆம் திகதியில் விற்கப்பட்டு மதிப்பீட்டாளரது கருத்தின்படி அது வாங்கப்படும் விலையுடன் குறித்த ஆதனத்தை அபிவிருத்தி செய்யவும், திருத்தியமைக்கவும், மேலதிகமாகச் சேர்க்கவும் செய்யப்பட்டிருப்பின் அத்தொகை 1977 மார்ச்சு மாதம் 31 ஆம் திகதியின் பின்னர் நன்கொடை வழங்கப்படும். ஆதனத்துடன் சேர்க்கப்பட்டதாகும்.
  2. மதிப்பீட்டாளரின் கருத்தின்படி குறித்த ஆதனம் பகிரங்கச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வாங்கப்படுமெனின், குறித்த தொகை நன்கொடை வழங்கப்பட்ட திகதியில் அதற்கான விலையாகும்.;

எந்த விலை குறைவாக உள்ளதோ

*. செயற்பாடு நிறைவேற்றப்படும் தருணத்தில் தீர்வை செலுத்தப்படுதல்

*. அசையாத சொத்தொன்றைக் கைமாற்றம் செய்யும்போது செலுத்தப்படவேண்டிய முத்திரைத் தீர்வையைக் குறித்து வைக்கப்பட்ட வங்கியொன்றில் செலுத்தியதும, வழங்கப்படும் சான்றிதழில் செலுத்தப்பட்ட முத்திரைத் தீர்வையையும், அன்றைய திகதியையும் குறிப்பிட்டுக் குறித்த சான்றிதழில் ஒட்டுதல் வேண்டும்.

இந்த வங்கிச் சான்றிதழ்களை மக்கள் வங்கி அல்லது இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்

புரள்வு வரி

turnover taxவரைவிலக்கணம்

  • 1990 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மத்திய மாகாண நிதி வரைவுச் சட்டத்தின் 03 ஆவது பிரிவின்படி புரள்வு வரி அறவிடப்படுகின்றது.

அவை அறவிடப்படுவது

  • ஒருவகையான பொருள் அல்லது திரவியம் மத்திய மாகாணத்துக்குள் விற்பனை செய்யப்படுமெனில், அந்த விற்பனைப் பெறுமதியின் 1%  உம் 5%  உம் என்ற விகிதத்தில் விதிக்கப்படும்.

செல்லுபடிக் காலம்

  • 1991 சனவரி மாதம் 01 ஆம் திகதி, 2011 சனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. 

புரள்வு வரிக் கட்டணங்கள்

தங்கம், இரத்தினக் கற்கள், நகைகள், தளபாடங்கள், அரிமரம்  -  5%

சிகரட் மற்றும் மதுபானம்  -  1%

வர்த்தமானி

  1. 636/13, 1990.11.15
  2. 642/18, 1990.12.28
  3. 917/2,1996.04.01
  4. 1371/23,2004.12.16
  5. 1389/5,2005.04.18
  6. 1467/14,2006.10.17
  7. 1476/1,2006.12.18

பந்தய வரி

betting taxவரைவிலக்கணம்

  • 1996 ஆம் 03 ஆம் இலக்க மத்திய மாகாண நிதி வரைவுச் சட்டத்தின் (துணை ஏற்பாடுகள்) 6 ஆவது பிரிவின் கீழ் பந்தய வரி விதிக்கப்படுகின்றது.

அது விதிக்கப்படுவது

  • மாகாணத்துக்குள் எந்தவொரு இடத்திலோ அல்லது வளவிலோ நடத்தப்படும் குதிரைப் பந்தயத்தின் மீது காசாகவோ அல்லது கடனாகவோ வைக்கப்படும் அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் எந்தவொரு பந்தயத்தின் மீதும் ஒரு வரி விதித்து அறவிடப்படும். (அது மாகாணத்துக்குள் நடத்தப்பட்டாலும், அல்லாவிட்டாலும்) இந்த வரி அமைச்சரது கட்டளையின்படி வர்த்தமானியில் வெளியிடப்படும்.

செல்லுபடியாகும் காலம்

  • 1997 சனவரி மாதம் 01

பந்தய வரிக் கட்டணம்

  • ஓவ்வொரு பந்தயத் தொகையின் மீதும் 5 %

வர்த்தமானி

  1. 953/9,1996.12.10

செயற்பாடு

duties

முத்திரைத் தீர்வை வருவாய்

 வருடம்

தொகை (ரூ. 000,000)

அடைவு (ரூ. 000,000)

1991

20

30

1992

21

37

1993

32

47

1994

40

57

1995

40

66

1996

40

63

1997

80

80

1998

84

99

1999

80

107

2000

80

118

2001

125

120

2002

130

138

2003

160

205

2004

160

253

2005

260

331

2006

270

358

2007

420

427

2008

659

417

2009

907

374

2010

440

481

2011

368

684

2012

725

827

 


மொத்த விற்பனை வரி வருவாய்

 வருடம்

தொகை (ரூ. 000,000)

அடைவு (ரூ. 000,000)

1991

105

104

1992

150

140

1993

150

163

1994

185

178

1995

207

193

1996

207

199

1997

220

225

1998

220

240

1999

229

267

2000

240

279

2001

315

315

2002

306

332

2003

350

396

2004

380

438

2005

450

483

2006

500

576

2007

773

1059

2008

1170

1328

2009

1739

1511

2010

2000

1683

2011

375

417*

2012

60

45*

* BTT யின் அறவீடு 2011 சனவரி 01 முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

முதன்மைச் செயற்பாட்டுப் பகுதிகள்

Road Development Servicesசந்தைப் பெறுமதியின் மீதான முத்திரைத் தீர்வை மதிப்பீடும் சேகரிப்பும்

  • உரிய அலுவலகங்களுக்குச் சென்றும் வங்கிகளிலிருந்தும் தகவல்களைச் சேகரித்தல்
  • பகிரங்க நொத்தாரிசுகளுடனும் காணிப் பதிவாளர்களுடனும் நெருங்கிய தொடர்புகளை வைத்திருத்தல்
  • தகவல்களின் அடிப்படையில் கோவைகளை ஆரம்பித்தல்
  • கோவைகளுக்குத் தேவையான கருவிகளைப் பெறுதல்
  • கோவைகளைப் பகுப்பாய்வு செய்தல்
  • செலுத்தப்பட்ட தீர்வை போதாமற் போனால் மேலதிகத் தீர்வையை மதிப்பிடுதல்

வரி செலுத்துவதில் வரியிறுப்போரை ஊக்குவித்தல்

  • சுயமதிப்பீட்டின் அடிப்படையில் வரியிறுப்போர் தமது வரியையும் தீர்வையையும் செலுத்த ஊக்குவித்தல்
  • பொருத்தமான இடங்களில் அறிவித்தல்களைக் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்தல்
  • அச்சு ஊடகச் செய்தியை வெளியிடுதல்
  • அறிவூட்ட நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல்
  • சொத்துக்களை மேற்பார்வை செய்தல்
  • வரியிறுப்போருடனான நேர்காணல்கள் மூலம் வரிகள் இறைகள் பற்றிய ஆலோசனைகளை வழங்குதல்

வரி செலுத்தத் தவறிய நிலுவையைப் பூச்சிய மட்டத்திற்குக் கொண்டுவருதல்

  • வரி செலுத்தத் தவறிய தற்போதைய நிலுவைத் தொகையைக் குறைத்தல்
  • மேன்முறையீடுகள் /எதிர்ப்புகள் ஏற்படுத்துதல்
  • வரியிறுப்போரிடம் சென்று வரி செலுத்தத் தவறிய தொகையைச் சேகரித்தல்
  • வரி செலுத்தாத அல்லது வரி செலுத்த இணக்கம் காணாதோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளைத் தொடருதல்

புதுப்பிக்கப்பட்ட தரவு நிரற்படுத்தும் முறை

  • பதிவகத்தில் கோவைகளைப் புதுப்பித்தல்
  • 31.12.2010 வரையுள்ள BTT கோவைகளை நிறைவுசெய்தல்
  • புதுப்பிக்கப்பட்டு கணினிமயப்படுத்தப்பட்ட தரவு நிரற்படுத்தலைக் கணினி வலையமைப்பு ஊடாக அடைய வழிசெய்தல்

இறைவரியைத் தோற்றுவிக்கும் புதிய வழிவகைகளை ஆராய்தலும் அபிவிருத்தி செய்தலும்

  • சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவான வகையில் இறைவரி வருவாய் வழிவகைகள் பற்றிக் கற்றறிதல்
  • இனங்காணப்பட்ட வழிவகைகள் பற்றிய சாத்தியக் கற்கைகள்
  • ஓவ்வொரு வழியிலிருந்தும் பெறப்படவுள்ள உத்தேச இறைவரி பற்றி அளவிடுதல்
  • மிகவும் பொருத்தமான வருவாய் வழிவகைகள் பற்றித் தீர்மானித்தல்
  • முன்மொழியும் உத்தேச புதிய வருவாய் வழிவகைகளது அங்கீகாரத்துக்கென அவற்றைப் பிரதம செயலாளரிடம் முன்வைத்தல்
  • அங்கீகரிக்கப்பட்ட வருவாய் வழிவகைகளைச் செயற்படுத்துதல்

பணியாட் குழுவினரது தொழில்சார் தேர்ச்சிகளை அபிவிருத்தி செய்தல்

  • பயிற்சி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை நடாத்துதல்
  • தொழில்சார் பயிற்சிக்கான பகுதிகளை இனங்காணுதல்
  • நடைமுறையொன்றைத் தயாரித்தல்
  • வள ஆலோசகர்களையும் அமையங்களையும் இனங்காணுதல்

செயற்பாடுகளைப் பாராட்டுதல்

  • ஒவ்வொரு அலுவலரையும் பற்றிய நாளாந்த> மாதாந்த முன்னேற்ற அறிக்கை
  • திணைக்களச் செயற்பாடு பற்றிய அரையாண்டு அறிக்கை
  • திணைக்களச் செயற்பாடு பற்றிய ஆண்டறிக்கை

நல்லாட்சி

  • அரச சட்டவிதிகளுக்கு அமையச் செயற்படுதல்
  • கணக்காய்வு விசாரணைகளைக் குறைத்தல்
  • சேவைப் பெறுநர்களது முறைப்பாடுகளைப் பூச்சிய நிலைக்குக் கொண்டுவருதல்

பக்கம் 1 / 2

முத்திரைத் தீர்வை

stamp duty உங்கள் சொத்து உண்மையான மதிப்பு

புரள்வு வரி

Business Turnover Tax BTT அப்லிஃப்டிங் மத்திய மாகாணத்திற்கு தொழில் முனைவோர் வலிமை

பந்தய வரி

Betting Tax பொழுதுபோக்கு நிதி நன்மை

எங்களை தொடர்பு

Reach us இல. 244, கட்டுகஸ்தோட்டை வீதி,  கண்டி, இலங்கை

Joomla template by Joomlashine.com