Sri Lanka Government Web Portalසිංහල අකුරු මුහුණත බාගත කිරීමதமிலெழுத்தைப் பெறவூம்

සිංහල (Sinhala)தமிழ் (Tamil)English

நல்வரவு

Ccentral Province Flag Sri Lankaமாகாண இறைவரித் திணைக்களம், மத்திய மாகாணம், இலங்கை என்னும் இணையத் தளத்திற்குள் உள்நுழைந்தமைக்கு நன்றிகள். 

இலங்கை  ஜனநாயக சோசலியக் குடியரசின் அரசியலமைப்பு அங்கீகாரத்தின் அடிப்படையில், மத்திய மாகாண அரச சபைகளின் மூலம் நிதிநியதிச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டதன் பின் 1990 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க நீதிச் சட்டத்தின் அடிப்படையில் மத்திய மாகாண இறைவரித் திணைக்களம் தாபிக்கப்பட்டது. அது மத்திய மாகாணத்தின் பிரதான அமைச்சர் என்னும் வகையில் நிதி அமைச்சினதும், பிரதான செயலாளர் என்னும் வகையில் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் மேற்பார்வையின் அடிப்டையில் செயற்படுத்தப்படுகின்றது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில், மாகாண சபைகளுக்கான வருமாண வளங்களை முகாமைத்துவம் செய்வதன் மூலம், மாகாணத்தின் பொதுமக்களுடைய நலன்களைக் கருத்திற் கொண்டு தேவைக்கேற்ற வகையில் நிதி வழங்களை ஒன்றினைத்தலும், வரி மற்றும் சேவைகள் என்பவற்றை முன்னெடுத்தலும் இதன் பிரதான இரு நோக்கங்களாகும்.

வரி மற்றும் சேவைகள் தொடர்பில் பொது மக்களை அறிவுறுத்துதல், அறிவுரைகளை வழங்குதல், வரி மற்றும் தீர்வைகளை மேற்கொள்வதற்குத் தேவையான விண்ணப்பப் படிவங்கள், காசோலைப் பத்திரங்கள் என்பவற்றை வழங்குதல் என்பன எமது சேவைகளாகும்.

Our Themeதிணைக்களத்தின் கருப்பொருள்

பூவிலிருந்து தேனெடுத்து மெல்லென நீங்கும் தேனி போன்று உலகுக்குத் துன்பம் வழங்காது காணிக்கை எடுப்போம் நியமத்தின் படியே

 


Our Visionநோக்கு

மத்திய மாகாணத்தின் இறைவரி வருமான அபிவிருத்திக்கென உயர் மட்டத்திலான பங்களிப்பு


Our Missionபணிக் கூற்று

சட்டமாக்கப்பட்ட இறைவரி வருவாய் வளங்கள் மூலமும் வரி செலுத்துவோர் பற்றிய தரவுகளைச் சேகரிப்பதன் மூலமும் ஒளிவு மறைவின்றி நேர்மையான வழியில் சமத்துவமான முறையில் மத்திய மாகாணத்தின் இறைவரி வருவாயை விருத்தி செய்வதன் மூலம் மாகாணத்தின் பொதுமக்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது.

 

அங்கீகரிக்கப்பட்ட மலர்

maha rathmalaமத்திய மாகாணத்தின் அங்கீகரிக்கப்பட்ட  மலர் (Rhododendron arboreum - subsp. zeylanicum.)

சிறந்த செயல்திறன் விருது 2018

அரசாங்க தகவல் நிலையம்

Visit Government Information Center - Sri Lanka

செய்திகள் மற்றும் நிகழ்வூகள

சிறந்த செயல்திறன் விருது 2018
2016 ஆம்  நிதி ஆண்டில் அரச நிறுவனங்களின் நிதி முகாமைத்துவம் மற்றும் செயலாற்றுகை தொடர்பில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் நடாத்தப்பட்ட மதிப்பீட்டு செயன்முறையின் போது மத்திய மாகாண இறைவரித் திணைக்களம் சிறந்த நிதிச் செலாற்றுகைக்கான தங்க விருதினைப் பெற்றுக் கொண்டது.

 


 

Pawnbroker actஈடுபிடிப்போருக்கான நியதிச்சட்டம் அமுலுக்கு வரும்.
2016 ஜனவரி 01ஆம் திகதி முதல் மத்திய மாகாணத்தில் ஈடுபிடிப்போருக்கான நியதிச்சட்டம் அமுலுக்கு வரும்..

 


  ஒட்டப்படும் முத்திரைகளின் இடைநிறுத்தம் - மத்திய மாகாணம்
1990.12.28 ஆம் திகதி கொண்ட 642/18 இலக்க வர்த்தமானயில் விதிக்கப்பட்ட வித்தியாசமான பெறுமதிகள் கொண்ட முத்திரைகள் ஒட்டப்படும் பயன்பாடு 2012 சனவரி 01 ஆந் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனவே, மக்கள் வங்கி அல்லது இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் பணம் செலுத்திப் பெறப்பட்ட சான்றிதழின் பயன்பாடு தேவைப்படுகின்றது.

முத்திரைத் தீர்வை

stamp duty உங்கள் சொத்து உண்மையான மதிப்பு

புரள்வு வரி

Business Turnover Tax BTT அப்லிஃப்டிங் மத்திய மாகாணத்திற்கு தொழில் முனைவோர் வலிமை

பந்தய வரி

Betting Tax பொழுதுபோக்கு நிதி நன்மை

எங்களை தொடர்பு

Reach us இல. 244, கட்டுகஸ்தோட்டை வீதி,  கண்டி, இலங்கை

Joomla template by Joomlashine.com